News January 25, 2025

பத்ம விருதுகள்: தேசம் தரும் அங்கீகாரம்

image

இந்தியாவின் சிவிலியன் குடிமக்களுக்கான மதிப்புமிகு விருது, பத்ம விருதாகும். கலை, சமூகப் பணி, பொதுச் சேவை, அறிவியல், வணிகம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்குபவர்களை கவுரவிக்க பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் பத்ம விபூஷன் -5 பேருக்கு, பத்ம பூஷன் -17, பத்மஸ்ரீ -110 பேருக்கும் வழங்கப்பட்டது.

Similar News

News August 29, 2025

சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

image

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.

News August 28, 2025

Xiaomi-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஆப்பிள், சாம்சங்

image

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் Xiaomi நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. விளம்பரங்களில் தங்களது தயாரிப்புகளை கொச்சைப்படுத்துவதை உடனே நிறுத்த அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில், ஐபோன் 16 புரோ மேக்ஸ் கேமரா, Xiaomi 15 அல்ட்ரா கேமராவை விஞ்சும் என நினைப்பவர்களுக்கு ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள் என Xiaomi விளம்பரம் வெளியிட்டது. அதேபோல் சாம்சங்கை தாக்கியும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

News August 28, 2025

விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, பாஜக கலக்கம்

image

தவெக மாநாடு குறித்த பேச்சுகளே இன்னும் அடங்காத நிலையில், விஜய் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார். ஆணவக் கொலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறது தவெக. ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கும் உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவின் ஆணவக் கொலைக்கு விஜய் வாய் திறக்கவில்லை என விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!