News March 27, 2024

6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் சிகுர்பாட்டி, புஸ்பகா கிராமங்களுக்கு இடையேயான வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் பெண் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

Similar News

News November 6, 2025

‘AK65’ அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

image

AK65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லியதாகவும், இதையடுத்து அவர் கதை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுடனான AK64 படத்தை விரைவில் முடித்துவிட்டு, லோகியுடன் இணைந்து அஜித் பணியாற்ற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த காம்போவுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

News November 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

News November 6, 2025

கோவை பாலியல் கொடூரம்.. மதுவிலக்கு கோரும் திருமா

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த மதுவிலக்கை TN அரசு அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் கொடூரமானது, பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாக X-ல் அவர் தெரிவித்துள்ளார். அதிக மது அருந்துவதில் இந்தியாவிலேயே TN 2-வது மாநிலமாக இருப்பதாகவும், 12% குடிநோயாளிகளாக உள்ளது கவலையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!