News March 27, 2024
தேர்தல்: திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.
Similar News
News September 19, 2025
பெரம்பலூர்: பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

பெரம்பலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 19, 2025
பெரம்பலூர் வருகை தரும் அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் மங்கலம், தொண்டைபாடி, நொச்சிகுளம், அருணகிரி மங்கலம், திம்முர், கூடலூர், கொட்டரை, சாத்தனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டி வைப்பதற்காக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (19-09-2025) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
News September 19, 2025
பெரம்பலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!