News January 25, 2025
உள்துறை அமைச்சரிடம் மாணவர் அமைப்பினர் கோரிக்கை

புதுச்சேரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் நேற்று வில்லியனூரில் உள்ள உள்துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து, பெண் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் டீனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Similar News
News September 10, 2025
கடற்கரையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை

காரைக்கால் நிரவி கருக்களாச்சேரி கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 10, 2025
புதுச்சேரி: 3வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கான 3வது சுற்று தற்காலிக சீட்டு ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி தங்களது சீட்டு ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
புதுச்சேரி 3 ஆம் இடம், எதில் தெரியுமா?

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.