News January 25, 2025
லாஸ்லியாவை பாத்தீங்களா.. இதுதான் சூப்பர் டயட்!

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, ‘ஹவுஸ்கீப்பிங்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா முன்பைவிட உடல் எடையை குறைத்து சிக்கென இருந்தார். இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள லாஸ்லியா, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொண்டு, ஃபைபர், புரோட்டின் உணவுகளை எடுத்ததாக கூறினார். மேலும், மாலை 6 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News October 14, 2025
சிறுநீர் குடித்து உயிர் பிழைத்த சம்பவம்

‘டீசல்’ பட பணிகளின் போது மீனவர் ஒருவர் பகிர்ந்த சம்பவத்தை ஹரிஷ் கல்யாண் நினைவுகூர்ந்துள்ளார். கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, புயலில் சிக்கி வங்கதேச எல்லைக்கு அடித்து செல்லப்பட்டதாகவும், அங்கு 48 நாள்கள் அந்த மீனவர் உயிருக்கு போராடியதாகவும் அவர் கூறியுள்ளார். கடல் நீர் குடித்தால் டிஹைட்ரேஷன் ஆகும் என்பதால், தனது சிறுநீரை குடித்து மீனவர் உயிர் பிழைத்ததாகவும் பகிர்ந்துள்ளார்.
News October 14, 2025
புரூஸ் லீ பொன்மொழிகள்

*வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை. *வாழ்க்கையே உங்கள் ஆசிரியர், நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். *மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் திருப்தி அடையாதீர்கள். *நீங்கள் நினைப்பது போல், நீங்கள் ஆகிறீர்கள். *தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படக்கூடியவை, அவற்றை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால்.
News October 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 488 ▶குறள்: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. ▶பொருள்: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.