News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News September 16, 2025
மழை பெய்தால் மரங்கள் விழுவது ஏன் தெரியுமா?

தொடர்ந்து மழைபெய்வதால் ஈரப்பதம் அதிகரித்து மண் தளர்வாகிறது. இதோடு, நிலத்தில் மழைநீர் தேங்குவதால், மரங்களால் ஆக்சிஜனை உள் இழுக்கமுடியாமல் அதன் வேர்கள் அழுகிப்போகும் நிலை ஏற்படுகிறதாம். இதனால் தான் பெரிய மரங்கள் கூட சின்ன சின்ன மழைக்கும் முறிந்து விழுகின்றன. ஆனால் எவ்வளவு மழைநீர் தேங்கினாலும் சில மரங்களின் வேர்கள் மட்டும் அழுகிப்போகாது என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
News September 16, 2025
வங்கி கணக்கு KYC அப்டேட் பண்ணுவது எப்படி?

வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்வது அவசியம். அதற்கு: *வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Login செய்யவும். *அதில், ‘KYC அப்டேட்’-ஐ கிளிக் செய்து, ‘வங்கி விவரங்களைப் புதுப்பி’ ஆப்ஷனை தட்டவும். *ஆதார், பான் & முகவரிச் சான்றுகளுடன் (ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம்) போட்டோ போன்றவற்றை டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்றி, Submit செய்தால், முடிஞ்சு! SHARE.
News September 16, 2025
உடனே வழங்க வேண்டும்: PM மோடிக்கு CM ஸ்டாலின்

தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்கிட வலியுறுத்தி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெ., டன் டிஏபி, 12,422 மெ., டன் எம்ஓபி, 98,623 மெ., டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை வழங்கிட, மத்திய ரசாயன & உர அமைச்சகத்திற்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளார். இது விவசாயிகளின் பயிர் உற்பத்திக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.