News January 25, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று(ஜன.24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News February 23, 2026
பாம்பன் மீனவர்கள் 12 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 23, 2026
இராமநாதபுரம்: ரூ.48,480 சம்பளத்தில் BANK வேலை!

இராமநாதபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதிற்குட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு<
News February 23, 2026
பாம்பன் பாலத்தில் விபத்து; 8 பேர் காயம்

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்பன் சாலை பாலத்தில் நேற்று(பிப்.22) ஆட்டோ பின்புறம் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


