News January 25, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

தி.மலை தீபத் திருவிழா – 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில், டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

JUST NOW: தி.மலையில் சோழர் கால தங்கப்புதையல் கண்டெடுப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிவன் கோயில், 3ம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று (நவ.3) பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக்காசுகளை அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

News November 3, 2025

சென்னை–திருவண்ணாமலை ரயில் கோரி எம்.பி. கடிதம்

image

திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை–திருவண்ணாமலை பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை விரைவில் இயக்கவும், திருவண்ணாமலை–கோயம்புத்தூர் இடையே புதிய இரவு நேர ரயில் சேவையை தொடங்கவும் ரயில்வே வாரியத் தலைவருக்கு, இன்று (நவ.3) திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை கடிதம் எழுதியுள்ளார். மக்கள் கல்வி, வேலை, வணிக தேவைக்காக இந்த இரு ரயில்களும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!