News January 24, 2025
அரியலூர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தினம் கொண்டாடவுள்ள நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளன. இதன் கீழ் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News January 12, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்: சிறுவன் மீது மோதிய இருசக்கர வாகனம்

தென்னூர், ஆரோக்கிய புரம் பகுதியைச் சார்ந்த அருள் அந்தோணி ராஜ் என்பவரது மகன் ராயிஸ்டன். இவர் அதேபகுதியில் உள்ள தேவாலயம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், சிறு காயம் ஏற்பட்டு வரதராஜன் பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.