News January 24, 2025
விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர் மாளிகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநரின் தேநீர் விருந்திற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆளுநருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, காங்., விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதேபோல், ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று எனக்கூறிய விஜய், புறக்கணிப்பாரா அல்லது கலந்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.
News August 21, 2025
மாநாடு சிறக்க வேண்டி யாகம் வளர்த்த தவெக!

மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, நிர்வாகிகள் யாகம் வளர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத சடங்குகளுக்கு எதிரான பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு, யாகம் நடத்தியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் யாகம் வளர்த்த சில மணி நேரங்களிலேயே, மாநாட்டு திடலில் நிறுவப்பட்டு வந்த 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததையும் டிரோல் செய்து வருகின்றனர்.
News August 21, 2025
‘குஷ்பு இட்லி’ என பெயர் வர இதுதான் காரணம்: குஷ்பு

‘குஷ்பு இட்லி’ என்ற பெயர் பிரபலமாக யார் காரணம் என்ற விவரத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார். ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது, நடிகர் பிரபு தனது கன்னத்தை பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என கூறியதாகவும், அப்போது முதல் அந்த வார்த்தை பிரபலமானதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அந்த டயலாக்கே அப்படத்தில் இல்லை எனவும், பிரபு எதார்த்தமாக அப்படி சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.