News January 24, 2025

மருங்கை சிவனுக்கு சிறப்பு வழிபாடு 

image

மருங்கப்பள்ளம் பகுதியில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கோவிலில்  தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜன.24) அங்குள்ள சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 13, 2025

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 13, 2025

தஞ்சை: இளம்பெண் தற்கொலை முயற்சி

image

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் இருந்து நேற்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ஆற்றில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்புத் துறையினர் இதனை கவனிக்கவே, அவரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!