News January 24, 2025
G.O.A.T என நிரூபித்த ரவிந்திர ஜடேஜா!

ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணியில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா, 2வது இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவர் முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட் எடுத்து இருந்தார். அதே போல, பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 38 ரன்களை விளாசி இருக்கிறார். சர்வதேச வீரர்கள் ரஞ்சியில் சொதப்பிய நிலையில், ஜடேஜா தான் உலகின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
Similar News
News December 25, 2025
கிறிஸ்துமஸ் வழிபாட்டில் PM மோடி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முக்கிய முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News December 25, 2025
சிலிண்டருக்கு மானியம்; உடனே இதை செக் பண்ணுங்க

சமையல் சிலிண்டருக்கான மானியம் உங்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். ➤இதற்கு, www.mylpg.in இணையதளத்திற்கு செல்லுங்கள் ➤இதில், நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் கம்பெனியின் லோகோவை க்ளிக் செய்யுங்கள் ➤மொபைல் எண் & LPG ஐடியை உள்ளிடுங்கள் ➤பின்னர் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும் ➤மானியம் வரவில்லை என்றால் <


