News January 24, 2025

புஸ்ஸி ஆனந்தை விஜய் வெளியேற்றியது ஏன்?

image

தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனையின் போது, புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இதற்கு காரணம் தவெக தேர்தல் வியூக பொறுப்பாளர் <<15151630>>ஜான் ஆரோக்கியசாமிதான்<<>> என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோவில், புஸ்ஸி இருக்கும்போது விஜய்யிடம் என்ன பேசினாலும் அது கசிந்துவிடுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 28, 2025

பொங்கலன்று நடைபெறவிருந்த தேர்வு மாற்றம்

image

பொங்கலன்று CA தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. தற்போது, மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், <<18631259>>CA (INTER)<<>> தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதியை மாற்ற டிச.18-ல் கடிதம் எழுதியிருந்ததாக குறிப்பிட்ட சு.வெங்கடேசன் MP, வேறு காரணம் சொல்லி தேதியை மாற்றிவிட்டு அவர்கள் ஆறுதல் அடையட்டும் என தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல: ராகுல் காந்தி

image

இந்திய விடுதலைக்கு போராடிய, அரசமைப்புக்கு அடிக்கல் நாட்டிய அனைத்து தியாகிகளுக்கும் காங்கிரஸ் ஸ்தாபன நாளில் ராகுல் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல, இந்திய ஆன்மாவின் குரல். எளிய, உழைக்கும் மக்களுக்கு அரணாக நிற்கும் கட்சி என அவர் கூறியுள்ளார். இன்னும் அதிக தைரியத்துடன் வெறுப்பு, அநீதி, சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட உறுதிமொழி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

கடவுளிடம் கோலிக்காக வரம் கேட்பேன்: நவ்ஜோத் சிங்

image

கடவுள் தனக்கு ஒரு வரம் கொடுத்தால், கோலி டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதை மீட்டு மீண்டும் விளையாட வைப்பேன் என முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். நாட்டின் 150 கோடி மக்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது எனவும், கோலி தனது ஃபிட்னஸ் அடிப்படையில் இன்னும் 20 வயதிலேயே நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் 24 காரட் தங்கம் என்றும் புகழ்ந்துள்ளார்.

error: Content is protected !!