News January 24, 2025

சேலத்தில் பல கோடி ரூபாய் பண மோசடி? 

image

அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில், முதலீடு செய்தால் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என பொதுமக்களிடம் பணம் பெற்ற 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அறக்கட்டளை இயங்கிய திருமண மண்டபத்தில் ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம்,13 கிலோ வெள்ளி பறிமுதல். கைதான விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் மூவரும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

Similar News

News September 10, 2025

சேலம்: உளவுத்துறையில் 394 பணியிடம்!

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 10, 2025

சேலம் சரகத்தில் 169 வாகனங்கள் பறிமுதல்

image

சேலம் சரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து ரூபாய் 79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்கு 54 லாரிகள் உள்ளிட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வாகன தணிக்கை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 10, 2025

செப்.26- ல் அஞ்சல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்!

image

செப்.26- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தின் 3-ம் தளத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் குறைகள், புகார்களை நேரிலோ (அ) செப்.20- க்கு முன் கிடைக்கும்படி தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். தபால் மூலம் அனுப்பும் புகார் கவர் மீது ‘DAK ADALAT CASE’ என எழுதி முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் -636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!