News January 24, 2025
சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
Similar News
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: அனுமதி மறுத்ததால் அரை நிர்வாண போராட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் கோவிலில் நாளை பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க காவல்துறையிடம் பாதுகாப்பு மனு அளித்தனர். இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்படும் என பொங்கல் வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தனர். இந்நிலையில் விசிக மாவட்ட செயலாளர் வேல் பழனியம்மாள் தலைமையில் இன்று 12 மணி அளவில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT
News September 13, 2025
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்