News January 24, 2025

ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது என ஆலோசனையும், மேலும் விவசாயிகளின் குறைகள் குறித்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆட்சியர் வழங்கி தகுதியுள்ள மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறபித்தார்.

Similar News

News December 26, 2025

திண்டுக்கல்: போதையில் நடத்த விபரீதம்!

image

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த பிரபு (35) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரி (32)யை சம்மட்டியால் தாக்கி கொலை செய்தார். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

திண்டுக்கல் ஆண்களே உஷார்!

image

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

திண்டுக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!