News January 24, 2025
ஸ்ரீதர் வேம்புவிடம் வாழ்த்து தென்காசி பாஜக தலைவர்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவை கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று(ஜன.23) சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News November 15, 2025
தென்காசி: தவறி விழுந்த முதியவர் கல்லில் அடிபட்டு பலி

கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66). இவர் நேற்று மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததார். அங்கிருந்த கல் மீது அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 15, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (14-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News November 14, 2025
தென்காசி: யானைகளை கட்டுப்படுத்த குழு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை தோழர்கள் என்ற குழு உருவாக்கப்படுகிறது ஒவ்வொரு வன சரகத்தில் அதிகபட்சமாக நாலு நபர்கள் கொண்ட யானை தோழர்கள் குழு அமைக்கப்படும் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


