News January 24, 2025
விழுப்புரத்தில் சமையல் போட்டி; லட்சக்கணக்கில் பரிசு மழை

விழுப்புரம் மீனாட்சி ஆறுமுகம் திருமண மண்டபத்தில் நாளை (ஜன.25) அவள் விகடன் வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9:00 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் வீட்டிலிருந்து சைவம் (அ) அசைவம் உணவு தயாரித்து எடுத்து வர வேண்டும். அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வகைகள் வழங்கப்பட உள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Similar News
News August 13, 2025
சுதந்திர தினம்: மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுகொண்டுள்ளார்.
News August 13, 2025
விசை தெளிப்பான் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிக்கு விசை தெளிப்பானை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வழங்கினார். உடன் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.
News August 13, 2025
திண்டிவனம் – வாலாஜா இடையே புதிய ரயில் பாதை

திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா வரை சுமார் 180 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதை மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நகரங்கள் ரயில் மூலம் இணைவதால் பல்வேறு நன்மைகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.