News January 24, 2025
ஈரோடு: ரூ.1.50 கோடி பறிமுதல்!

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா், தனபிரனேஷ் தலைமையிலான குழுவினா், நேற்று மாலை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட, ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றனா்.
Similar News
News December 26, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 26, 2025
ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சடையாம்பாளையம்,. சூரம்பட்டிவலசு, பச்சப்பாளி, அணைக்கட்டு சாலை, முத்தம்பாளையம், நல்லியம்பாளையம், தெற்குபள்ளம், ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம், கள்ளுக்கடைமேடு, சின்னசடையம்பாளையம், குறிக்காரன்பாளையம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சேனாதிபதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 26, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு…

போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். போதைப்பொருட்கள் உங்கள் எதிர்காலத்தைத்
தீர்மானிக்க விடாதீர்கள்.
ஒரு தவறான தேர்வு, வாழ்நாள் கனவுகளை அழித்துவிடும்.
போதைப்பொருட்களுக்கு ‘இல்லை’ என்றும்,
நல்வாழ்க்கைக்கு ‘ஆம்’ என்றும் சொல்லுங்கள். போதை பொருட்கள் புகார் அளிக்க 100 ஐ டயல் செய்யவும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர்


