News January 24, 2025
நெல்லையில் இன்று மனித உரிமை ஆணையர் விசாரணை

வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
நெல்லை: பண மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்களது செல்போனில் ஆன்லைன் பகுதி நேர வேலை என கூறி டாஸ்க் வைத்து சிறிது பணத்தை உங்கள் கணக்கில் காண்பித்து நம்ப வைத்து உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் மோசடி நிகழ்வுகள் தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து 1930-க்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
News January 14, 2026
நெல்லையில் பொங்கல் வேஷ்டி சேலை இல்லை

நெல்லை மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் நிலவும் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டவுன், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வேட்டி இருந்தால் சேலை இல்லை என்ற நிலை உள்ளதால், ரேஷன் ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கிடைக்காததைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
News January 14, 2026
நெல்லை: 2 நாட்கள் மதுக்கடை மூடல் – ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று ஜனவரி 13 விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


