News January 24, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்

சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,525க்கும், 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 60,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.7,555ஆக விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலையும் ரூ.240 அதிகரித்து ரூ.60,440ஆக உச்சம் தாெட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து, ரூ.105ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,05,000ஆகவும் விற்கப்படுகிறது.
Similar News
News August 26, 2025
இதயத்தை கிள்ளும் சமந்தாவின் கிளிக்ஸ்!

விவாகரத்து, உடல் நல பிரச்சனைகள் என பல தடைகள் இருந்தாலும், அதை தாண்டி சிங்கப் பெண்ணாக வீரநடை போட்டு வருகிறார் சமந்தா. வெப்சீரிஸ், படங்கள் என மீண்டும் சமந்தா பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. மேலே இணைக்கப்பட்டுள்ள சமந்தாவின் போட்டோக்களை நீங்களும் கண்டு மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த சமந்தாவின் படம் என்ன?
News August 26, 2025
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஏமாற்று வேலை: EPS

4 ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அறிவிப்பதாக EPS சாடியுள்ளார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார். புதிய திட்டங்களை கொண்டுவராத திமுக, அதிமுகவின் திட்டங்களை முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
News August 26, 2025
CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.