News January 24, 2025

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நான்கு பேர் கைது.

image

பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகளில் இருந்து 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போதை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து , அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

Similar News

News September 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.18) இரவு 10 மணி முதல் இன்று(செப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வெடிபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

News September 18, 2025

தஞ்சாவூர் மக்களே… தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தஞ்சாவூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க…!

error: Content is protected !!