News January 24, 2025
நீர் காகங்களை வேட்டையாடிய நபருக்கு ரூ.50,000 அபராதம்

ப.வேலூர் காவிரிஆற்று வாய்க்காலில் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நீர் காகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த எஸ்.கொந்தளம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடிக்கும் தொழிலாளி முருகானந்தம் (35) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
Similar News
News August 31, 2025
நாமக்கல்: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

நாமக்கல்: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது <
News August 31, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
News August 31, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரப்பாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்