News January 24, 2025
பிராய்லர் சிக்கன் உடலுக்கு கெடுதல் தருமா?

பிராய்லர் கோழிகள் 6 வாரத்திலேயே வளர்ந்து விடுவதால், அவற்றுக்கு வளர்ச்சிக்கான ஊசி செலுத்தப்படுவதாக சிலர் அஞ்சுகின்றனர். ஆனால், அந்த ஊசியின் விலை ₹500 வரை இருப்பதால், செயல்முறையில் இது சாத்தியமில்லை என்கிறார்கள் டாக்டர்கள். நோய் தொற்றை தடுக்க Antibiotic கொடுக்கப்படுவதால், சமைக்கும்போது மருந்தின் வீரியம் போய்விடும் என்றும் கூறுகின்றனர். அதனால் பயப்படாமல் பிராய்லர் சிக்கன் சாப்பிடலாம்.
Similar News
News November 7, 2025
தொலைந்து போன போனை நீங்களே கண்டுபிடிக்கலாம்

மத்திய அரசின் ‘Sanchar Saathi’ இணையதளம் மூலம் தொலைந்துபோன உங்கள் போனை ட்ராக் செய்து கண்டுபிடிக்கலாம். இதில் வேறு யாரும் உங்கள் போனை பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தால்தான் Sanchar Saathi மூலம் போனை கண்டுபிடிக்க முடியும். <
News November 7, 2025
திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது: CM ஸ்டாலின்

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யவும் திமுகவினர் தயாராக உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமண விழாவில் பேசிய அவர், திமுகவை ஒழிக்க யார் யாரோ வந்து சென்றதாகவும், ஆனால் எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார். SIR-க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தாலும், அதன் பணிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் CM வலியுறுத்தினார்.
News November 7, 2025
செல்போன் ரீசார்ஜ்.. புதிய அறிவிப்பு

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் Jio, Airtel, VI நெட்வொர்க்குகளின் ரீசார்ஜ் கட்டணங்கள் 10- 12% வரை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 5G பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலையுயர்வு முடிவை டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, ₹199 ரீசார்ஜ் கட்டணம் ₹222-ஆக அதிகரிக்கக்கூடும். நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க?


