News January 24, 2025
தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் அப்துல்லா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி நாளை (சனிக்கிழமை) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10, 12, ITI, DIPLOMA, DEGREE ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
வேலூரில் நாளை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், நாளை நவம்பர் 7-ம் தேதி காலை 10:30 மணி அளவில், மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ.6) இரவு முதல் நாளை (நவ.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


