News January 24, 2025
தொழிற் பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் – காஞ்சிபுரம் (2024-25)

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அறிவிப்பின் படி, தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் 31.01.2025 அன்று ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் நிரப்பப்படுகின்றன. விவரங்களுக்கு dadskillkpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 19, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். அதில், 22 மாணவர்கள் முதல் இடம், 14 மாணவர்கள் 2ஆம் இடம், 11 மாணவர்கள் 3ஆம் இடம் என வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.
News August 19, 2025
காஞ்சி: கணவனை கொல்ல கூலிப்படை ஏவிய மனைவி

மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
News August 18, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.