News January 24, 2025
ரோஹித் விக்கெட் எடுத்துட்டு என்ன கொண்டாடவில்லை?

ரோஹித்தின் விக்கெட்டை எடுத்த ஜம்மு காஷ்மீர் வீரர் உமர் நசீர், தான் அவரின் பெரிய ரசிகர் என்பதால் எந்த ஒரு விதமாகவும் கொண்டாடவில்லை என்றார். மேலும், நிச்சயமாக என் வாழ்நாளில் நான் எடுத்தது பெரிய விக்கெட் ரோஹித் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 19 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
Similar News
News January 5, 2026
கல்வி யாராலும் அழிக்க முடியாத சொத்து: DCM உதயநிதி

கல்வி யாராலும் அழிக்க முடியாத சொத்து என்று DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், TN மாணவர்களின் கையில் ஒரு பேப்பர், பேனா இருந்தாலே போதும், எதையும் சாதித்து விடுவார்கள்; இப்படிப்பட்ட மாணவர்கள் கைகளுக்கு லேப்டாப் வழங்க உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். லேப்டாப் மூலம் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் திறக்கும் என்றும் குறிப்பிட்டார்.
News January 5, 2026
NDA கூட்டணியில் விஜய்யை கொண்டு வர அமித்ஷா வியூகம்

DMK-விற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளையும் NDA கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக BJP-க்கு <<18769878>>அமித்ஷா<<>> உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை BJP தீவிரப்படுத்த உள்ளதாம். மதச்சார்பின்மை அடிப்படையில் தவெகவும், காங்கிரஸும் கூட்டாளிகள் என ஃபெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், தற்போது BJP-ம் காய் நகர்த்த உள்ளது.
News January 5, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பள்ளிகள் திறந்த முதல்நாளே மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, 2 மாவட்டங்களுக்கு ஜன.7-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். அதேபோல், ஹெத்தை அம்மன் கோயில் விழாவையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


