News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..

Similar News

News November 4, 2025

க.குறிச்சி: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. கள்ளக்குறிச்சியில் மட்டும் 33 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

கள்ளக்குறிச்சி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் இருந்து 60 வயது மூதாட்டி நேற்று(நவ.3) காலை நடந்து சென்றார். அப்போது, சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ம்

News November 4, 2025

க.குறிச்சி: ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சி!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க வந்த மல்லாபுரத்தைச் சார்ந்த தர்மலிங்கம் என்பவர் சொத்துகளை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்ற வலியுறுத்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!