News January 24, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று, நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

Similar News

News August 31, 2025

நாமக்கல்: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

நாமக்கல்: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது <>உழவன்<<>> செயலியையோ அணுகலாம்.

News August 31, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

News August 31, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரப்பாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்

error: Content is protected !!