News January 24, 2025
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… இன்றே கடைசி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆவது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தேசிய வருவாய் வழித் தேர்வு பிப். 22இல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்றைக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News October 22, 2025
புதிய டிஜிபி நியமனம்: EPS-க்கு அமைச்சர் பதிலடி

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக விமர்சித்த EPS-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அடாவடித்தனத்தாலே புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், எத்தனையோ ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதை மறந்து EPS பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசுக்கு நெருக்கமானவர்களை டிஜிபியாக நியமிக்கவே தாமதப்படுத்துவதாக அவர் விமர்சித்து இருந்தார்.
News October 22, 2025
Deep Fake கண்டெண்ட்டுகளுக்கு செக்: IT விதிகளில் மாற்றம்

AI-ஆல் உருவாக்கப்படும் Deep Fake கண்டெண்ட்டுகள் குறித்த அபாயத்தை குறைக்க IT விதிகளில் மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, 50 லட்சம் பயனாளர்களை கொண்ட சமூக வலைதளங்கள், பயனாளர்கள் பதிவேற்றுவது உண்மையானதா அல்லது AI-ஆல் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டெண்ட்டுகளில் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய மாற்றம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 22, 2025
அபுதாபி T10 சீசனில் களமிறங்கும் சீனியர் வீரர்கள்

அபுதாபியில் வரும் நவ.18-ம் தேதி தொடங்க உள்ள T10 சீசனில், 4 இந்திய சீனியர் வீரர்கள் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். Aspin Stallions அணியில் ஹர்பஜன் சிங், Ajman Titans அணியில் பியூஷ் சாவ்லா, Vista Riders அணியில் ஸ்ரீசாந்த் விளையாட உள்ளனர். 8 அணிகள் மோதும் இந்த தொடரில் டு பிளசிஸ், ரஸல், ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களும் விளையாட உள்ளனர்.