News March 27, 2024
உச்சத்தில் பங்குச்சந்தை

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளி உயர்ந்து 22,112 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. LIC உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News January 16, 2026
அதிமுக ஆபிஸில் தற்கொலை.. இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பகுதி செயலாளர் சுகுமார் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த சில நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அவர், கட்சி அலுவலகத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணங்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 16, 2026
மீண்டும் ரேஸில் முந்துகிறாரா சிவகார்த்திகேயன்?

பொங்கலை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வெளியானது. முதல் 2 நாள்கள் நல்ல வசூல் இருந்தாலும், பின்னர் குறையத் தொடங்கியது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை தொடங்கியதும் கலெக்ஷன் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று பொங்கல் நாளில் ₹10 கோடி வசூலித்துள்ளதாகவும், விரைவில் ₹100 கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்படுகிறது.
News January 16, 2026
இவர்களுக்கும் பொங்கல் பரிசு.. ஹேப்பி நியூஸ்

TN-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. பயனாளிகள் யாரும் விடுபடக்கூடாது என்பதற்காக 14-ம் தேதியும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. சிலர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதால், இன்னும் பரிசை வாங்காமல் உள்ளனர். இதனால், இம்மாதம் இறுதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


