News March 27, 2024

நீலகிரி உதகை மலை ரயில் சிறப்பு சேவை

image

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுடன் மலை இரயில் பயணத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில் தினமும் குன்னூர் உதகை, மேட்டுப்பாளையம் உதகை என மலை ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் வரும் கோடை சீசனை முன்னிட்டு உதகை கேத்தி, கேத்தி உதகை இடையேயான மார்க்கத்தில் சிறப்பு மலை இரயில் சேவையை வரும் வெள்ளி முதல் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இயக்க தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த விவரம் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊட்டி நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் காந்தியடிகள், நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஊட்டி சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, 3000, 2000 மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

News October 28, 2025

நீலகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <>www.tnesevai.tn.gov.in<<>> , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!