News January 23, 2025
அண்ணா பல்கலை.,க்குள் செல்ல QR Code கட்டாயம்

அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்கலை., வளாகத்தில் நுழைவதற்கு QR கோடுடன் கூடிய விசிட்டர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்படுகிறது. தேவையற்றவர்கள் உள்ளே நுழைவதை முற்றிலும் தடுக்கும் வகையில் QR Code முறை மிக விரைவில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 24, 2025
பிஹாரில் மோடி இன்று பரப்புரை

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
News October 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
News October 24, 2025
விஜய் ரசிகர்கள் தற்குறிகள்: ஜி.பி.முத்து

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.


