News January 23, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு விலை சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிராம்பு சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கிராம்பு விலை சரிய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ கிராம்பு 1100 ரூபாய் என்று கடந்த மாதம் விலை இருந்த நிலையில் தற்போது அது 900 ரூபாயாக குறைந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கிராம்பு விளைச்சல் அதிகளவிற்கு வரும் என்பதால் கிராம்புகளை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
குமரி: ஆட்டோ கவிழ்ந்து பரிதாப பலி

திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல புத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த மாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
குமரி: நாளை கடைசி நாள்; ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் மற்றும் புதியவர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்ள ஜனவரி 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 16, 2026
குமரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <


