News March 27, 2024
ராமநாதபுரம்: என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News July 6, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 6 காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News July 5, 2025
மதுரை – இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே பணிகளை நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை – ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

ராமநாதபுரம் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <