News January 23, 2025
IPL: KKRக்கு பெரிய ஷாக்?

ரஞ்சி டிராபி தொடரில் ம.பி அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயருக்கு இன்று காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக நாள்கள் எடுக்கும் என்பதால், ஐபிஎல்லில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் தான் அவரை, KKR அணி ₹23.75 கோடிக்கு வாங்கியது. மேலும், நடப்பு சீசனில் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட இருந்ததாகவும் கூறப்பட்டது.
Similar News
News October 31, 2025
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கசாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ✱செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேலை பருகலாம். SHARE IT.
News October 31, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 31, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் நேற்று $3,949 ஆக இருந்த 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று $4,018.9 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியதால், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இன்று நம்மூர் சந்தையிலும் தங்கத்தில் விலை கிடுகிடுவென உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி, 1 கிராம் தங்கம் ₹11,300-க்கு விற்பனையானது.


