News March 27, 2024
சென்னை: நேற்று மட்டும் ரூ.1.42 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
சென்னை: ரஜினிகாந்த & தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, காவல்துறையினர், நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இது புரளி என தெரியவந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
News October 28, 2025
சென்னை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
சென்னை: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

சென்னை மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.


