News March 27, 2024
BREAKING: நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி

நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என நாதக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இனி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.
Similar News
News March 31, 2026
கிருஷ்ணகிரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News March 31, 2026
அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு: ECI

கொளத்தூரில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் பரப்புரையை விஜய் ரத்து செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், பரப்புரையின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து டிஜிபி-யிடம் விளக்கம் கேட்டுள்ள ECI, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளது.
News March 31, 2026
பங்குனி உத்திரம்.. மறந்தும் இவற்றை செய்யாதீங்க!

முருகனுக்கு உகந்த <<19520603>>பங்குனி உத்திரம்<<>> இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் மறந்தும் நாம் சில காரியங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. *அசைவம் சாப்பிடக்கூடாது * முடி வெட்டுதல், சவரம் செய்தல், நகம் வெட்டக்கூடாது *பிறரிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது *கடன் வாங்கக்கூடாது *தங்க நகைகளை இன்றைய தினம் அடமானம் வைக்கக்கூடாது. SHARE IT.


