News January 23, 2025
இந்தியா அபார வெற்றி

ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பையில் இந்தியா அபார வெற்றி பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை, வெறும் 59 ரன்கள் மட்டும் எடுத்து படுதோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஷ்மிகா செவ்வன்டி 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் 5, 3, 2 என சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
Similar News
News January 12, 2026
புல்லட் ரயில் தாமதத்திற்கு ₹88,000 கோடி விலை!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் (மும்பை – அகமதாபாத்) 2029 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையே 2027 ஆக.15-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முதலில் ₹1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கொரோனா, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், அதன் செலவுகள் தற்போது ₹1.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
News January 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 578 ▶குறள்: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ▶பொருள்:கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
News January 12, 2026
இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு.. சுந்தர் OUT!

NZ-க்கு எதிரான நேற்றைய முதல் ODI-ல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. 20-வது ஓவர் வீசிய போது காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய அவர், பேட்டிங் செய்யும் போதும் ரன் ஓட முடியாமல் திணறினார். இந்நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, காயம் காரணமாக <<18824015>>பண்ட்<<>> விடுவிக்கப்பட்டார்.


