News January 23, 2025
மயிலாடுதுறை: மாற்று பாதியில் செல்லும் ரயில்கள்

செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16848 ஜனவரி 24,25,27,28,30 ஆகிய தேதிகளில் விருதுநகர்,மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய வழிகளில் மாற்றுப் பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும் என தென்னக ரயில்வே இயக்கம்அறிவித்துள்ளது.
Similar News
News July 5, 2025
மயிலாடுதுறையில் சிக்கிய மோசடி நபர்!

மயிலாடுதுறை, சேந்தங்குடியில் ஹிமாஜ் ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும் சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்ததில் சுபாஷ் சந்திரபோஸ் 3 நபரிடம் ரூ. 21,85,000 பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்து. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
News May 8, 2025
மயிலாடுதுறை: விபத்தில் உயிரிழந்த மாணவன் தேர்ச்சி

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கபிலன் மேலையூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், கபிலன் 343 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News May 8, 2025
மயிலாடுதுறை: வனத்துறையில் வேலை

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <