News January 23, 2025
குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News November 4, 2025
புதுகை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், முதலமைச்சர் எதிர்வரும் 10.11.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
News November 4, 2025
புதுகையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

புதுகையில் மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
News November 4, 2025
புதுகை: ஆண் சடலம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அடுத்த கீராத்தூரில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து கீராத்தூர் விஏஓ அளித்த புகாரின் பேரில் சடலத்தை கைப்பற்றிய ரெகுநாதபுரம் போலிசார் உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


