News January 23, 2025
OLA, Uber நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கட்டண விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க OLA, Uber நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறாரா என்பதை பொறுத்து, ஒரே சேவைக்கு 2 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை Uber மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
ராசி பலன்கள் (19.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 19, 2025
MGNREGA-ஐ வலுப்படுத்த PM மோடிக்கு CM வலியுறுத்தல்

VB-G RAM G திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டுக்கு 125 வேலை நாள்கள் என்பதை வரவேற்றுள்ள ஸ்டாலின், பிற அம்சங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றார். 60:40 என்ற புதிய பகிர்வால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, MGNREGA திட்டத்தை வலுப்படுத்தி தக்கவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News December 19, 2025
87 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

சீனாவில் Fan Zeng என்ற 87 வயது ஓவியர் திடீரென SM-ல் டிரெண்டாகியுள்ளார். இதற்கு காரணம் அவரது கலைப் படைப்புகள் அல்ல. அவரது 37 வயதான மனைவி Xu Meng, அண்மையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் அதற்கு காரணம். ஆரோக்கியமான மகன் பிறந்திருப்பதாக தெரிவித்த அவருக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Fan Zeng-க்கு முதல் மனைவி மூலம் பல குழந்தைகள் இருந்தாலும், இந்த குழந்தையே தனது வாரிசு என அவர் அறிவித்துள்ளார்.


