News January 23, 2025
ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டதா? கவலை வேண்டாம்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும், கடைகள் மற்றும் பேருந்துகளில் சில்லரை வாங்கும்போதும் சில நேரம் நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் வந்துவிடுவதுண்டு. அந்த நோட்டுக்களை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என தெரியாமல் பலர் இருப்பர். ஆனால் இந்த கவலை தேவையில்லை எனவும், இந்தியாவில் உள்ள எந்த வங்கி கிளையிலும் அதை கொடுத்து வேறு புதிய நோட்டை வாங்கி கொள்ளலாம் என்றும் RBI தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
கட்சி தாவலுக்கு EPS-ன் செயல்பாடுகளே காரணமா?

அதிருப்தி அதிமுக புள்ளிகளை, <<17438694>>திமுக<<>> தன் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு EPS, கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களை காரில் கூட அனுமதிப்பதில்லை, கருத்துகளை கூற விடுவதில்லை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜெயலலிதா போல் ஒற்றை முகமாக இருக்க EPS முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுவதாக வைகைச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
News August 18, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.
News August 18, 2025
உக்ரைன் NATO-வில் சேரக்கூடாது: டிரம்ப்

உக்ரைன், NATO-வில் சேரக்கூடாது என்பதற்காகவே ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் NATO-வில் சேர முடியாது என மத்தியஸ்தம் செய்துவரும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் உக்ரைன் உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த முடியும் (அ) தொடர முடியும் என்றும் டிரம்ப் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.