News January 23, 2025
தென்காசி வருகிறார் கனிமொழி எம்.பி.!

தென்காசி தெற்கு மாவட்ட பகுதியில் ஜன.29 அன்று புதிய திமுக அலுவலக கட்டடங்கள் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட 10 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும் படியும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
சங்கரன்கோவிலில் நகர் மன்ற தலைவர் தேர்தல்

சங்கரன்கோவில் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வருகிற ஆக.18ம் தேதியன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 28 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் அவர் பதவியை இழந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்போது காலியாகவுள்ள பதவிக்கு (பெண்) மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
News August 14, 2025
தென்காசி வழியாக புதிய ரயில் இயக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
தென்காசி வழியாக பெங்களூருக்கு ஆகஸ்.17 புதிய ரயில் இயக்கம்

தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18-ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19-ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது.