News March 27, 2024
தோனி மீதான அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை

தோனி மீதான ரசிகர்கள் அன்பு வியப்பளிப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தோனி வீரர்களின் அறையில் நிற்பதை கேமராமேன் காட்டுகிறார். அதை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தோனியின் மீதான இந்த அன்பை என்னை புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி அவருக்கு மட்டும் இது நடக்கிறது என தெரியவில்லை” எனக் கூறினார். முன்னதாக, பல நேரங்களில் இவர் தோனியை விமர்சித்திருந்தார்.
Similar News
News January 3, 2026
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் பிசிசிஐ

டிட்வா புயலால் கடுமையாக பாதிப்படைந்த இலங்கைக்கு உதவ BCCI முன்வந்துள்ளது. இந்தாண்டு ஆகஸ்டில் இந்தியா, இலங்கை இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக டி20 தொடரிலும் விளையாட BCCI ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தொடரில் கிடைக்கும் பணம் முழுவதும், நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
News January 3, 2026
ஜனவரி 3: வரலாற்றில் இன்று

*1760–வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
*1831–சமூக செயல்பாட்டாளர் சாவித்ரிபாய் புலே பிறந்தநாள்
*1957–முதலாவது மின்கடிகாரம் அறிமுகம்
*1966–இந்திய வீரர் சேத்தன் சர்மா பிறந்தநாள்
*1972–நாடகாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுநாள்
*1989–பாடகி சைந்தவி பிறந்தநாள்
*1993–நடிகை நிக்கி கல்ரானி பிறந்தநாள்
*2002–விஞ்ஞானி சதீஷ் தவான் நினைவுநாள்
News January 3, 2026
ரீ-ரிலீசிலும் ரஜினியின் ‘படையப்பா’ சாதனை

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீசானது. இந்நிலையில், ரீ-ரிலீசிலும் 25 நாள்கள் வெற்றிகரமாக ஓடி ‘படையப்பா’ மெகா பிளாக்பஸ்டர் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்து, ரம்யா கிருஷ்ணன், ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் பூங்கொத்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளது. ₹20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எத்தனை பேர் படையப்பாவை மீண்டும் பார்த்திங்க?


