News January 23, 2025
மதுவிலக்கு வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் பொது ஏலம்

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர், மதுவிலக்கு வழக்குகளில் 26 பல்வேறு வகையான வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 49 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் அருகில் உள்ள ஐ.டி.ஐ., மைதானத்தில் வரும் 30ஆம் தேதி ஏலம் விடப்பட்ட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், வரும் 28-29ஆம் தேதிகளில் மாலை 5 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பங்கேற்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 4, 2025
செங்கல்பட்டில் தீய சக்திகளில் இருந்து காக்கும் சேப்பாட்டி அம்மன்

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் அமைந்துள்ளது சேப்பாட்டி அம்மன் கோயில். இந்தக் கோயில் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பக்தர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். நிகழும் ஆடி மாதத்தில் ஒரு முறை சென்று வாருங்கள். ஷேர்!
News July 11, 2025
மன அமைதியை கொடுக்கும் செங்கண்மாலீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூருக்கு 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவராக செங்கண்மாலீஸ்வரர் உள்ளார். இக்கோயில் 3 ஆம் நூற்றாண்டில் முற்கால சோழப் பேரரசர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்று, மன அமைதியைப் பெற இக்கோயில் ஒரு சிறந்த இடமாகும். மன அழுத்தம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க