News January 23, 2025

திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம்

image

சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் உரிய வழிகாட்டுதலோடு, திருநங்கை மற்றும் இடைபாலின நபர்களுக்கான, குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில், திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் முகாம், மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நீலகிரியில் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள், எட்டாம் மைல், கேர்ன்ஹில் உள்ளிட்ட 5 சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News October 22, 2025

நீலகிரி மக்களே உஷார்! வெளுக்கப்போகும் மழை

image

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக, அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 22, 2025

நீலகிரி: 5வது நாளாக இன்றும் ரத்து!

image

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. கனமழையால் காட்டேரி, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!