News January 23, 2025
தாய்லாந்தில் இன்று முதல் LGBTQ+ திருமணங்கள்

தன்பாலின திருமணத்தை இன்று முதல் சட்டரீதியாக அங்கீகரிக்கிறது தாய்லாந்து. ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு பல நாடுகளில் எதிர்ப்பு இருக்கும் சூழலில் தாய்லாந்து எப்போதுமே ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது. ஆனால், திருமணங்களுக்கு இன்று வரை சட்டரீதியான அங்கீகாரம் இருந்ததில்லை. இந்த சட்டத்தின் மூலம் உலகமெங்கும் உள்ள ஓர்பால் ஈர்ப்பாளர்கள் LGBTQ+ தாய்லாந்து நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Similar News
News November 1, 2025
தேசிய கபடி வீரர் சுட்டுக்கொலை!

பஞ்சாபில் தேசிய கபடி வீரர் தேஜ்பால் சிங் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சொந்த வேலையாக லூதியானாவுக்கு சென்றபோது காவல்துறை(SSP) அலுவலகம் அருகிலேயே, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. அப்போது, ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து, தேஜ்பால் சிங்கின் மார்பில் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால், பதற்றம் உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News November 1, 2025
CSK-வில் பிருத்வி ஷா?

அடுத்த சச்சின் இவர்தான் என ஒரு காலத்தில் கணிக்கப்பட்ட பிருத்வி ஷா, ஃபார்ம் அவுட்டாகி பெரும் பின்னடைவுகளை சந்தித்தார். IPL தொடரிலும் சொதப்பிய அவர், தற்போது மீண்டும் அதிரடிக்கு திரும்பி வருகிறார். நடப்பு ரஞ்சி தொடரில் இரட்டை சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஷாவை, அணியில் சேர்க்க CSK முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. CSK அணிக்கு பிருத்வி ஷா சரியான சாய்ஸா?
News November 1, 2025
அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.


