News January 23, 2025
உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

தஞ்சையில் நாளை (ஜன.24) பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிர்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 7, 2025
தஞ்சை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 7, 2025
தஞ்சை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

தஞ்சை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News November 7, 2025
தஞ்சை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி!

பேராவூரணி அருகே சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் கடை வீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வழியில் மீன் ஏற்றி வந்த மினி லாரி, சுந்தரவடி வேல் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


