News January 23, 2025

குமரியில் இன்று மாநாடு!

image

அகில இந்திய சித்த மருத்துவ கழகம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு குமரியில் இன்று(ஜன.23) தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். 25ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News September 16, 2025

நாகர்கோவில் டூ தாம்பரம் புதிய அறிவிப்பு

image

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் இம்மாதம் 26ஆம் தேதி முதல்அடுத்த மாதம் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இதேபோல் தாம்பரத்தில் இருந்து 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்ககிழமையும் மாலை 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

News September 16, 2025

நகை, பணம் பெற்றவர் ஏமாற்றியதால் தற்கொலை

image

குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக வேலை பார்த்த வெள்ளிசந்தை வேல்முருகன் அவரை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்று விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 15, 2025

குமரியில் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

image

திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம்,முட்டம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!